மங்கை மாரி

மங்கல நாணை சூடி வந்தாள் 

மங்கை மாரி காக்க வந்தாள் 


கண்ணுக்குள் தீயை தேக்கி வைத்தாள்

கண்கள் மூடியே காவல் கொண்டாள்


பட்டு வண்ண சிற்றாடை

பாசத்தில் பாயும் நீரோடை


ஜொலிக்கும் மூக்குத்தி முகஜாடை 

சொந்தம் கூடிடும் அவள் மேடை


ஏந்திடும் வாளை ஒரு கரமே 

என்றும் காத்திடும் அவள் வரமே


மண்ணில் மழையாய் இறங்கிடுமே

மாரியின் கருணை காத்திடுமே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

காரிருள் வண்ணன்