Posts

Showing posts from October, 2024

வாழ்க மகளே

அது என்ன புன்னகை? அன்பை வாரி வழங்கும் புன்னகை ! இது என்ன மாயம்? இயல்பாய் பழகும் இத்தனை பண்புகள் ! அது என்ன புதுமொழி? பாசத்தின் வழி மொழி! இது என்ன உள்ளம்? எவரையும் உடனே ஈர்க்கும் வெள்ளம் ! வாழ்க எம் மகளே! வளர்ந்து அழகாய்; நிமிர்ந்து வளமாய்; வாழ்ந்திடும் எங்கள் காவிரியே! வாழ்க! வாழ்க!

கலைகளின் வாணி

 கண்கள் திறந்தாள்  கலைகளின் வாணி கவிதைகள் தந்தாள்  கருணையின் ராணி இன்னிசை வீணை  இசை தந்த வாணி இனித்திடும் இல்லம்  இவள் எங்கள் வேணி  தாமரை தாங்கிடும்  தளிர் மென் மேனி தவழ்ந்திடும் புன்னகை  தான் கொண்ட வாணி கற்றிட ஆயிரம் தந்தவள் வாணி காலையின் கதிராய் காப்பவள் ராணி

காரிருள் வண்ணன்

கைத்தளம் கொண்டான் காரிருள் வண்ணன்;  மெய்தளம் தந்தாள் தாமரை கரத்தாள் ; உய்தளம் வேண்டி உன் முன் நின்றவர் ; பொய்தளம் இல்லா வாழ்வதை பெறுவார் !