ஆத்தோரம் மாமரமே; அள்ளித் தந்த சீதனமே; ஆசையாய் நான் பாக்கும்; அழியாத ஓவியமே, காத்தாடும் மூங்கிலிலே; கரைஞ்சோடும் தேன் குரலே; காவேரியாத்தினிலே கால் நனைக்கும் வாங்கல் மண்ணே, புரட்டாசி புதுமாசம்; பூவெல்லாம் தேன் வாசம்; பொறந்தானே எம்பேரன் பொங்கிவரும் ஆறாட்டம், காவேரி ஆறுமாச்சு; கரையும் இங்கே ஈரமாச்சு; கால் எடுத்து நீ நடக்க ;கடலு கூட ஓரம்போச்சு, பள்ளிக்கூடம் போகவேணும்;பாடங்களை படிக்கவேணும்; பாசத்துல நீயுமொரு; பள்ளிக்கூடம் ஆகவேணும், நிறைய நீ படிக்கவேணும்; நெச வாழ்க்கை வாழ வேணும் ; பணம்தேடி ஓடும் அந்த பரிதாபம் குறைக்க வேணும், தாய் சொல்ல தகப்பன் சொல்ல; தட்டாம கேக்க வேணும்; தன்னுசுரா உன்னுசுரா தங்கச்சிய பாக்க வேணும், வேர்வை நனைச்சுவைச்சா;விதையெல்லாம் மரமாகும்; விடிகால சூரியனே !ராவெல்லாம் பகலாகும், தாய் தகப்பன் மனசுபோல தழைச்சு நிக்கும் நெல்மணியே; தாத்தாவின் உசுரத்தான் தாங்கி நிக்கும் கண்மணியே!