குரு ராகவேந்திர

இதய கோயிலில் என்றும் ராமனே! 

எங்கள் ராயர் கொண்டார்,

இமைகள் மூடியே இதயம் பாடியே 

தினமும் பூஜை செய்தார்,


எங்கள் ராயர் கொண்டார்; ராமா! 

எமக்கு உன்னை தந்தார்!


மூன்று மூர்த்திகள் தந்த பேறுகள்,

முனிவன் உன்னையே நனைத்த ஆறுகள்,

மூலராமன் அவன் தந்த ஆசிகள்,

முடிவில்லாத மழையின் மேகங்கள்,


எங்கள் ராயர் கொண்டார் அதை 

எமக்கு அள்ளித் தந்தார்!


காமதேனுவாய் கருணை ஓடைகள்,

கண்திறந்து நீ தந்த ஞானங்கள்,

காட்டு வழிதனில் காட்டும் பாதைகள்,

காக்க வந்தவன் கருணைப் பார்வைகள்,


எங்கள் ராயர் தந்தார்! அவர்' 

எமக்கு வாழத் தந்தார்

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்