ஆயினும் காவேரி

 தேடிவரும்; ஓடிவரும்; 

தெம்மாங்கு பாடி வரும்;

ஆடியிலே பெருக்கெடுத்து 

காவேரி ஓடிவரும் !

கூடிவரும் சொந்தமெல்லாம் 

நாடி வரும் உன் கரைக்கே;

கொண்டாடி குளித்திருக்க! 

குறையின்றி வாழ்ந்திருக்க!


நாயகியே! காவேரி! 

நாளெல்லாம் காக்க வேணும் !

நாடெல்லாம் நலமாக;

நல்ல விதை தான் முளைக்க;


நீரால சீராட்டி நீ யென்றும் 

காக்க வேணும் ;

தாயே எம் காவேரி ;

வாழ வைக்க வேண்டும் அம்மா !

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்