குரு ராகவேந்திர
வாழ்க வாழ்க வாழ்க நீயே வாணிதாசரே,
அனுமனின் ஆசியை அள்ளி வழங்கும் குருராயரே,
வாணிதாசரே எங்கள் குருராயரே,
புதிய ராகம் பூபாளத்தை புவனகிரி தந்தது;
புண்ணியபூமி புதல்வனை ஏற்று புனிதம் கண்டது,
காவிரிகரை வந்து கடமை சொல்லி ஞானம் தந்தது,
தஞ்சை மண்ணில் தரனியை காக்க தலைவனானது,
வாணிதாசரே எங்கள் குருராயரே,
கால்கள் கடந்த கல்லும் மண்ணும் புனிதமானது
கண்ணன் காட்டிய கீதைசொல்லி கண்கள் திறந்தது,
உள்ளம் உருகி உண்மை உணர்ந்து உன்னை தொழுதது,
உலகம் வாழ நீ உணர்த்திய பாடம் உண்மையானது,
வாணிதாசரே எங்கள் குருராயரே
Comments
Post a Comment