ுரு ராகவேந்திர
உயிராய் உருவாய் உயர்வாய் நின்றாய்
எங்கள் குருவே போற்றி,
நிலையாய் நினைவாய் நெஞ்சில் நிலைத்தாய்
நீயே குருவே போற்றி,
எளிதாய் எல்லாம் எமக்குத் தந்தாய்
எங்கள் குருவே போற்றி,
என்ன பாக்கியம் நாங்கள் செய்தோம்
எல்லாம் நீயே போற்றி,
கீதையின் பாதையை கீதமாய் தந்த
குருவே உன்னைப் போற்றி,
கூடிய கூட்டம் தேடியே வந்திடும்
என்றும் உன்னைப் போற்றி,
இராமன் பூஜையை நாளும் செய்திடும்
நல்லவன் புகழே போற்றி,
ராக வேந்திர நாமம் சொல்வோம்
நாளும் உன் புகழ் போற்றி,
போற்றி போற்றி போற்றி போற்றி ராகவேந்திரா போற்றி,
போற்றி போற்றி போற்றி போற்றி குருவே ராயரே போற்றி
Comments
Post a Comment