யதுகுல கண்ணனே

யதுகுல திலகனே வருவாய்; எங்கள் இல்லத்தில் அமைதியை தருவாய்!


கண்ணா! நீ! இல்லத்தில் அமைதியை தருவாய்!


போர்கண்ட நாட்கள் போதும்; உன் 

புன்னகை பூமழை வேண்டும்!


கண்ணா உன் ! புன்னகை பூமழை வேண்டும் !


பெற்றவள் உற்றவள் பேதமில்லாமல் ;

பேய்மகள் நஞ்சுண்டு அச்சமில்லாமல்;


கொஞ்சிடும் தாயின் மடியும் கொள்ளாமல் ;

கோபியர் மயங்கிட கொஞ்சம் நில்லாமல் ;


ஓடிடும் கண்ணனே! வா எங்கள் முன்னே!


நாடிடும் வெண்ணெய் நான் கொண்டு தருவேன்;

ஊர் கண்டு மகிழ்ந்திட தேர் கொண்டு வருவேன் 


வாய் கொண்ட மண்ணில் வையகம் காட்டும்

வான் கொண்ட நிறமதின் தேன் தரும் மழையே


வா எங்கள் கண்ணனே! வாசலின் முன்னே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்