பெரிய திருவடி

 விண்ணில் இருந்து மண்ணை யளக்கும் கண்கள் கொண்டவனே!


கையில் சக்கரம் கொண்டவன் மாலவன் மனதில் நின்றவனே !


தாயின் பெருமை நிலைத்திட பூமியில் தன்னைத் தந்தவனே !


தரணியை காப்பவன் மாதவன் தன்னை முதுகில் சுமப்பவனே


காணும் கண்கள் கண்டதும் வணங்கும் கண்ணிய குலமகனே 


கண்களின் கருணையே காத்திடும் நீதியே கருடனே தளபதியே


பெறுவோம்  பெருமாள் அருளை உன்னால் பெரிய திருவடியே


உன்னால் என்றும் பெறுவோம் அருளை பெரிய திருவடியே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்