சிவனே சிவனே சிவனே
சீறும் கங்கை தாய் தனையே
சிரசில் தாங்கிய சிவனே
சீறும் நாகத்தை நஞ்சுடனே
கண்டத்தில் ஏந்திய விடனே
சிவனே சிவனே சிவனே
சிந்தனை வேறில்லை சிவனே
ஐந்து விரல்கள் அழகாய் கூட்டி
அருளும் எங்கள் சிவனே
அண்ணா மலையில் உண்ணா முலையுடன் எரிந்திடும் தீபச் சுடரே
எழுந்திடும் தீயே விரிந்திடும் சுடரே
ஒளிர்ந்திடும் பிறையின் வடிவே
ஒன்றில் இரண்டாய் இரண்டில் ஒன்றாய்
வாழ்ந்திடும் வாழ்வின் வழியே
சிவனே சிவனே சிவனே
சிந்தனை வேறில்லை சிவனே
Comments
Post a Comment