என் ராசா மன்னவனே
பொங்கிவரும் காவிரியே; புரட்டாசி பூ மழையே;
எங்கவீட்டு சிங்கக்குட்டி; நீ! இறக்கி வைச்ச புன்னகையே!
தென்னை யெல்லாம் புதுப்பாள ;தேனூரும் ஒரு வேளை;
தேங்காம தினம் ஊறும்' பாச மெல்லாம் உம்மேல!
வண்டு வந்து பூவாட்டும்; வாச மெல்லாம் ஊர் கூட்டும்;
வாசலிலே போட்ட கோலம்' வரவேற்பு தான் படிக்கும்!
வானத்துல வெள்ளி நின்னு வழிகாட்டும் விடியலில;
வந்து நின்ன சின்னவனே! எம் ராசா மன்னவனே!
கால் நடக்கும் பின்னால மனசு யெல்லாம் முன்னால
கண்மணியே உன் மனசு ஏறி நிக்கும் வான் போல
ஏறி நிக்கும் இமயமலை எங்க வீட்டு சின்னமலை
கூடிவரும் கூட்ட மெல்லாம் கொண்டாடும் தங்கமலை
Comments
Post a Comment