குரு ராகவேந்திர

ஓடி வந்து சரணடைந்து உத்தமன் 

வேங்கடன் முன் பணிந்து


உலகம் வாழ வழி அறிந்து

உலக வாழ்க்கை தனை துறந்து 


தேடி தேடி எம்மை தேடி 

தெளிவு தந்த குருவே நீ

தேவை யென்றும் எமக்கே நீ


ஆயிரம் வழிகள் இருந்தாலும் 

அதையும் கால்கள் தொடர்ந்தாலும் 


சீரிய வழியில் எம்மை செலுத்தும் 

மாதவன் கருணை மதி முகமே

மத்வர் காட்டிய திருமுகமே


வாழ்ந்திடும் குருவே வணங்கி நின்றே

வந்திடுவோம் உன் வழி சென்றிடுவோம்

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்