அன்னை தந்த ஆறுமுகம்

அன்பாய் அழகாய் காக்கும் முகம்

அன்னை அவள் தந்த ஆறுமுகம் 


மண்ணில் வரமாய் வந்த முகம்

விண்ணையும் ஆளும் வேலன் முகம் 


வேல் ஒன்று கொண்டாய் சிக்கலிலே

வெற்றியை கண்டாய் செந்தூரிலே


அழகிய பாலனாய் சிக்கலிலே

ஆற்றல் வீரனாய் செந்தூரிலே


அழகிய மயிலது வாகனமாய்

அன்புடன் சேவலை கொடியுனதாய்


கொண்டாய் வேலுடன் நீ அழகாய்

கொண்டோம் உன்னை எம் உயிராய் 


செந்தில் வேலா எம் முருகா

செங்கல் வராயா மால் மருகா


முருகா முருகா வேல் முருகா

வருவாய் தருவாய் மால் மருகா

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்