லஷ்மி நாராயணன்

 கண்கள் செய்த பயன் இன்று இதுவோ

காட்சியாய் உனை கண்ட பலன் இதுவோ


பெரிய திருவடி மேனியில் அமர்ந்து 

பெரிதினும் பெரியதாய் நம்பிக்கை தந்திடும் 

லஷ்மி நாராயணன் அருள் இதுவோ


முரன் என்னும் அசுரன் முற்றிலும் அழிந்திட 

மூட்டிய தீயாய் சக்தியை காட்டிடும் 

ஏகாதசி தரும் ஆற்றலும் இதுவோ


ஏகாதசி அன்று விரதம் இருந்து 

ஏற்றம் தந்திடும் இறைவனை நினைத்து 


வாழ்ந்திடும் வலிமையின் நாளும் இதுவோ


சக்தியின் வடிவாய் தாயவள் அருகில் 

சங்கு சக்கர தாரி உன் மடியில் 

கண்டது கண்களின் பயன் இன்று இதுவோ

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்