வாழ்க நீ சின்னவளே
கண்ணுல குறும்போட;
கையில் கரும்போட;
கற்கண்டு தேனோட;
வந்தாளே செல்லமக!
வாசமுல்லை சின்னமக!
கைபிடிச்ச கரும்பாட்டம்;
வாழ்வினிக்கும் தேனாட்டம்;
ஊர் மெச்சும் உன்னாட்டம்;
எங்களுக்கு கொண்டாட்டம்!
கைபிடிக்கும் காவிரியே;
கால் நனைக்கும் கடலையே;
வாழவைக்கும் வான்மழையே;
வாசலிலே பூ மழையே!
வாழ்க எம் சின்னவளே!
வான் புகழ என்னவளே!
தாய் தகப்பன் மனசாட்டம்!
தாங்கி நிக்கும் உசுராட்டம்!
Comments
Post a Comment