நீல வண்ணனே ராமா

நீலமேக வண்ணத்திலே; 

நெஞ்சில் இனித்திடும் ராகத்திலே;

நிலவின் குளிராய் இதயத்திலே ;

நீ இறங்கி வந்தாய் எம் நிலத்தினிலே!


வானத்தில் புதிதாய் ஒரு தோற்றம் ;

வண்ணப் பூக்களின் ஜதியாட்டம் ;

வாரி அணைத்திட ஒரு கூட்டம் ;

வந்தாய் நீயும் புன லாட்டம்!


வில்லை ஏந்திடும் கரங்களிலே ;

சொல்லை ஏந்திடும் இதயத்திலே;

அன்புடன் கரையும் பாசத்திலே;

அண்ணல் ராமனே நாமத்திலே !


காத்தாய் முனிவரை ஒரு காலம்;

காதல் வாழ்வில் ஒரு ஜாலம்;

கானகம் சென்றாய் சில காலம்;

கற்றோம் உன்னிடம் பல காலம் !


இல்லறம் காட்டிய நல்லறமே ;

இதயம் தேடும் உன் அறமே;

அனுமனை அணைத்திட்ட அருட் கரமே;

அகிலம் காத்திடும் உன் வரமே!


ராம ராம ராம ராம ராம ராம ராம்!

ராம சீதா ராம சீதா ராம சீதா  ராம்!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்