ராஜ் கணபதி

ராஜன் நீயே மகாராஜன் 

ராஜ கணபதி எம்ராஜன்


சூடிய மாலையின் மலர் நேசன்

சுழலும் உலகின்  உயிர் வாசன்


தனியாய் அரசு வேம்புடனே 

தந்தம் தும்பிக்கை தன்னுடனே


தடைகள் உடைக்கும் நாயகனே

தன்னிகரில்லா விநாயகனே


அழகாய் அமர்ந்து அருள் செய்யும்

யானை முகம் விந்தை பல செய்யும்


கனிவுடன் காக்கும் கணபதியே 

கவலை இல்லை உன் துணையே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்