பழம் நீ முருகா
பழம் நீ என்றே பாடி வந்தோம் உன்னை
பழநி மலை தேடி
பசி துயர் எல்லாம் மறந்தே வந்தோம்
பாலன் உனை நாடி
பாலகன் முருகனே பார்வதி மகனே
பழநி வாழ் முருகா
தாயவள் தந்த வேலுடன் நின்ற வேலவன் நீ முருகா
ஊரது கூடி பேரது பாடி காவடி ஆடிடுமே
வேல் கொண்ட நாளிதை தேர் கொண்டு ஆடி
ஊர் நின்று பாடிடுமே
தனியாய் வந்தாய் தாயுடன் நின்றாய் தைப் பூச நாளிதிலே
வாங்கிய வேலால் நீங்கிடும் தீமைகள் காத்தாய் நீ எமையே
முருகா முருகா முருகா முருகா காத்தாய் நீ எமையே
Comments
Post a Comment