ஏழுமலையான்
வண்ண மலர் மாலையப்பா
வானம் தொடும் தோற்றமப்பா ;
கண்கள் கண்ட நேரமப்பா
கவலை இனி இல்லையப்பா!
பொன் அளக்கும் சீனிவாசா;
புவி அளந்த வரதராஜா;
மண் அளந்த வாமன ரூபா;
விண் அளந்த விஸ்வ ரூபா!
கால் நடந்து ஏழுமலை;
காண வந்தோம் நீயே துணை!
ஊண் மறந்து ஏங்கி நின்றோம்;
உடன் இருந்து காப்பாய் என்றும்!
Comments
Post a Comment