அன்னை மரியின் மகனே நீ
அன்னை மரியின் அன்பு புதல்வரே
அகிலம் காத்திட வந்தீரே
ஆவின் குடிலிலே அவதரித்த நீர்
அன்பை பாலாய் தந்தீரே
எளிய வாழ்வையே ஏற்று கொண்ட நீர்
எமக்கெல்லாம் ஆகி நின்றீரே
மனிதர் வாழ்வின் மகத்து வத்திலே
மனிதநேயமாய் வாழ்ந்தீரே
எங்கள் தேவனே எம் வாழ்வின் மேய்ப்பரே
எம்மை வீடு சேர்ப்பீரே
Comments
Post a Comment