விநாயகா

நீரின்றி வேரில்லை வேரின்றி பயிரில்லை நீயின்றி நானில்லை நாயகா 

எங்கள் ஊர் கண்ட பொழுதே விநாயகா

தாவிடும் மனதினை தன் முகம் காட்டியே சஞ்சலம் தீர்த்திடும் நாயகா

தாயவள் செல்லப் பிள்ளை விநாயகா 

கூடிடும் நன்மையும் நாடிடும் செல்வமும் நாயகன் உன்னருள் நாயகா 

என்றும் வான் கொண்ட வரமே விநாயகா 

தேன் கொண்ட கரும்பும் செவ் விளநீரும் 

நான் கொண்டு தருவேன் நாயகா

வான் கொண்ட மழையாய் 

வந்தருள் புரிவாய் விநாயகா 



ஊர் கொண்ட கொழுக்கட்டை 

உன் முன் நிறைந்திட 

நீ கொள்ள வருவாய் நாயகா 


சீர் கொண்டு எம் குலம்  

வாழ்ந்திட செய்வாய் விநாயகா


என்றும் வான்தரும் மழையாய் விநாயகா

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்