ஆதிசிவன் அற்புதமே

 அடடா! அடடா! அற்புதமே! ஆதிசிவன் மடி அற்புதமே!


காதில் சொல்பவன் அற்புதமே !

கார்த்திகேயன் அவன் அற்புதமே!


வாரி அனைத்திடும் வானவன் கரங்கள் ;

பாசம் காட்டிடும் பரமனின் கண்கள் !


மடியேறி அமர்ந்திடும் மழலை முருகன்;

மந்திரம் சொல்லி தந்திடும் தலைவன் !


சொல்வதை அன்புடன் ஏற்றிடும் ஈசன்;

சொல்லி தந்தவன் சுவாமி நாதன்!


நல்லதை ஏற்க நாடகம் புரிந்தவன்;

நமசிவாயனே நம்மை காப்பவன்!


அற்புதம்! அற்புதம்! அற்புதமே !

ஆதிசிவன் என்றும் அதிசயமே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்