மீனாட்சி சுந்தரேஸ்வரர்
வைகை நதியின் கரையினிலே
வாழ்வின் வளமே அதிசயமே
மண்ணின் இதயம் மதுரையிலே
மானிடம் காக்கும் எம் மீசா
மங்கை மதுரை மீனாட்சி
மதுரை நகரின் மனசாட்சி
பொங்கும் வைகை யின் புனலாட்சி
புதிதாய் கொண்டாள் உன் மாட்சி
கைத்தலம் கொண்டாய் மதுரையிலே
காத்திடும் கண்கள் காவலிலே
பொங்கும் புன்னகை உதட்டினிலே
பொற்றாமரைக் கரையின் குளத்தினிலே
எத்தனை அழகாய் பொன்மேனி
எங்கள் உயிராய் திருமேனி
சுந்தரேசன் உன் மேனி
சுழலும் கங்கை திரிவேணி
Comments
Post a Comment