தணிகை வேலா

தங்க முகமாய் தந்தாய் காட்சி 

தணிகை வேலா எமக்கு


தணியா தாகம் கொண்டே உன்னை 

காண வந்தோம் மலைக்கு


பூவின் மாலைகள் புண்ணியம் செய்ததே உந்தன் தோளில் சேர


புதிய மாலையில் புகலிடம் கொண்டதே 

பூ மலர் உன் புகழ் பாட


இதயம் பாடியே இமைகள் தேடியே 

ஏங்கி நின்றதே தேடியே


இமைகள் மூடியே இதயம் திறந்ததே 

எந்தன் குமரனை நாடியே


கையில் வேலுடன் கண்ணில் அழகுடன் கருணை செய்தாய் நீ முன்னே


கண்ட நிறைவுடன் கண்ணில் மகிழ்வுடன் வாழ்ந்திருக்கும் இம் மண்ணே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்