தந்த கணபதி
தடை யெதும் இல்லா வாழ்வினை தந்தாய்
தந்த கணபதி எங்கும் நின்றாய்
கடைமடை கண்ட காவிரி போலே
காத்தாய் எமையே கண் இமை போலே
வண்ண பூக்களால் மாலைகள் செய்தே
மயிலோன் அண்ணன் தோளில் சாத்தி
மனங் கொண்ட மல்லிகை சரத்தினை சூட்டி
மகிழ்ந்தோம் மடி தனில் பட்டாடை போர்த்தி
எரியும் தீப ஒளியாய் வாழ்வை
ஏற்றி வைத்த உன் பாதம் பணிந்து
என்றும் வாழ்வோம் உன்னை நினைத்து
எங்கள் கணபதி உன்னை துதித்து
Comments
Post a Comment