மாலை கொண்டவன் மாதவன் என்பவன்

 மாலை கொண்ட தோள்களை கண்டேன் 

மாலவன் மாதவன் அடிமையாய் நின்றேன்


வண்ண அழகு பட்டாடை பார்ப்பவர் 

கண்களில் சிற்றோடை 


உருகும் இதயம் தன்னாலே

உன்னை கண்டது பொன்னாலே 


நெற்றியின் திருமண் கண்டாலே

நினைவுகள் நிலைத்திடும் உன் மேலே


மலையப்ப சுவாமி என்றாலே 

மலைபோல் செல்வம் முன்னாலே


காரிருள் வண்ணனை கண்டாலே

கவலைகள் மறையும் தன்னாலே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்