ஜெய ஜெய சங்கர

 காவி வண்ணம் மேனியில் ஒளிரும்

கருணை வெள்ளம் கண்களில் வழியும்


காத்திடும் தண்டம் தோளது தாங்கிடும்

கையில் கமண்டலம் பாபங்கள் போக்கிடும் 


நெற்றியில் நிலைத்த நீறதின் தோற்றம் 

நெஞ்சில் மாலையாய் ருத்ரனின் மாற்றம்


கண்டிட கண்கள் தவமது செய்திட

கண்டேன் குருவின் பாதம் பணிந்திட


சங்கர சங்கர சங்கர சங்கர

சங்கர சங்கர ஜெய ஜெய சங்கர

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்