குரு ராகவேந்திர

துளசிமாலை அணிந்த குருவின் காட்சி காணக் கிடைத்ததே,

தூய வாழ்வின் கதவு திறந்தே உன்னை அழைத்து வந்ததே,


மனித வாழ்வின் மகத்துவத்தை மனத்தில் ஏற்றி வைத்ததே,

மாயக் கண்ணன் சொன்ன கீதையை மனமுருகி தந்ததே,


அனுமன் பீமன் மத்வர் காட்டிய பாதை கடந்து வந்ததே,

மந்திரா லயத்தில் மண்ணில் மறைந்து மனிதர் நம்மை காத்ததே,


என்றும் எங்கள் குருவின் நாமம் இதயம் நிறைந்து நின்றதே

ராகவேந்திரா ராகவேந்திரா 

நாமம் வெற்றி கொண்டதே,

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்