வாழ்க மகனே

வாழ்க நீ எம் மகனே; 

வாழ்க! வாழ்க!


களைப் பறியா காவிரியே; 

கை குலுக்கும் புன்னகையே;

உடன் நடந்து உறவாடும் 

உற்சாகப் பூ மழையே!


கடல் கடந்து சென்றாலும் 

கரை மீண்டு வந்தாலும்;

மலை கண்ட புகழோடு

நிலை கொண்ட அன்போடு;


நேரிழையாள் துணையோடு; 

நெஞ்சினிக்க மகனோடு' மகளோடு;


மண் மயங்கி பாராட்ட!

விண் இறங்கி சீராட்ட! 

வாழ்வாய்! நீ எம் உயிரே!


வாங்கலம்மன் அருளாளே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்