வேலன் வரவு

ஆறுபடை வீரன் காப்பு; 

அதுவே வேண்டிடும் நோன்பு!


செந்தில் வேலன் வரவு;

செந்நெல் தந்திடும் உணவு!


நீல கடலதன் தாலாட்டு; 

நெஞ்சில் இனித்திடும் ஓர் பாட்டு!


கையில் வேலுடன் விளையாட்டு;

காத்திட புறப்படும் உனைப் பார்த்து!


கால்கள் கடந்து வந்திடுமே;

கண்கள் இமைக்க மறந்திடுமே!


கந்தன் கூர்வேல் காத்திடுமே;

கனவுகள் நனவில் மலர்ந்திடுமே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்