அன்னை உமையின் அரசாட்சி

மனதில் ஏதும் கவலையில்லை

மறைந்தது உன்னால் மீனாட்சி


கலங்கும் கண்களை காணவில்லை 

காத்தாய் மதுரை மீனாட்சி


பொங்கும் வைகை கரை தனிலே 

புதிதாய் பாய்ந்த புது வெள்ளம் 


பொன்னாய் விளைந்தது புது நெல்லும் 

பூவாய் மலர்ந்தது எம் உள்ளம்


எங்கள் மதுரை மீனாட்சி 

எம்மை காத்திடும் உன் ஆட்சி


அன்னை உமையே அரசாட்சி

அவளே எங்கள் உயிர் சாட்சி

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்