ஆண்டாள் என்றே

 அழகு தாமரை; அற்புத மல்லிகை; 

இதயத்தை வெல்லும் ஈடில்லா ரோஜா; 


தங்க அணிகளன்; தாங்கிடும் புன்னகை;

எடுப்பாய் கொண்டை; 

எல்லாம் எல்லாம் இனிதே கொண்டாய் !


அதனினும் இனிதாய்! தந்தாய் எமக்கே! 

தன்னிகரில்லா தலைவன் புகழை!


தமிழாய் உருகி அழகாய் நீயே 

ஆண்டாள் என்றே அற்புத பெயருடன்!


தாயே தமிழே தருவாய் தமிழே!

மாதவன் சூடிய மாலையின் உயிரே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்