காத்திடும் துர்கை
இனி எமக்கில்லை அச்சம் அம்மா
இனி எமக்கில்லை அச்சம் அம்மா
கண்களின் ஒளியே
கனக துர்க்கையே
கவலை எமக்கில்லை அம்மா
ஒவ்வொரு கரமும் ஓர் துயர் நீக்கிடும்
ஒன்றாய் இணைந்தே ஓர் வழி காட்டிடும்
அழகிய மாலை அற்புத புன்னகை
அன்னை உன் அருளாய் அதிசயம் காட்டிடும்
கங்கை உன் வெள்ளம் கரை எம்மை சேர்த்திடும்
காலங்கள் கடந்தே வாழ்ந்திட அருளிடும்
கருணையே உயிரே கனக துர்க்கையே
கவலை எமக்கில்லை காத்திடும் தாயே
Comments
Post a Comment