அன்னை காளி
ஆயிரம் தீபங்கள் கண்களிலே;
அற்புத வாளும் கைகளிலே;
சூலமும் உடுக்கையும் சேர்ந்திருக்கும்
நெற்றியில் குங்குமம் நிலைத்திருக்கும்
காப்பவள் காளி கண்முன்னே
கவலையேது இனிபின்னே
வாழும் வாழ்வதில் குழப்பமில்லை
வந்தாள் காளி பயமுமில்லை
எலுமிச்சை மாலை தோள்களிலே
என்றும் எங்கள் வினை தீர்க்கும்
சிவந்தாள் காளி சீற்றத்துடன்
தீமைகள் எல்லாம் ஓடிவிடும்
காக்கும் தாயின் பாதத்திலே
பணிந்தோம் காப்பாள் தாயவளே
Comments
Post a Comment