வாழ்க மருமகளே
கால் தடம் கொண்ட காவிரி ஆறு;
கணவன் குழந்தைகள் நீ கொண்ட பேறு!
சற்றே வானம் சாய்ந்தே வாழ்த்த;
சந்தியில் நிலா அது புன்னகை பூக்க!
வாழ்வாய் என்றும் வளம் தரும் நிலமாய்;
வற்றா ஊற்றாய் உளம் பொங்கும் அன்பாய்;
வாழ்ந்திடும் இல்லத்தின் வான் தந்த மழையாய்;
வாழ்வாய் சிறப்பாய்; வாழ்வதில் நிறைவாய்!
வாழ்க! நலமுடன்! வாங்கல் அம்மன் அருளால். Happy birthday Anitha
Comments
Post a Comment