குரு ராகவேந்திர
கேட்கும் வீணையின் நாதத்திலே
கேள்விக்கு பதிலை தந்தவரே
வாழ்வின் வழியில் ஒளியாக
பாதை காட்டி நின்றவரே
சூடிய மாலையின் மலர் போலே
சுற்றம் கூடி வாழ்ந்திடவே
வாடும் மனங்களில் மணமூட்டி
வாழ்ந்திட செய்த குருவருளே
தேடும் விழிகளின் முன்வந்து
தெய்வமாய் நின்ற திருவருளே
நாடி உன்னை மகிழ்வோடு
மந்தராலயம் தேடி ஓடி வந்தோம்
மண்ணில் மருந்தை தந்தவரே
மானிடம் காத்திட வேண்டிடுவோம்
Comments
Post a Comment