குரு ராகவேந்திர

 புல்லாங் குழலால் மயக்கும் ஒருவன்; 

புன்னகை அம்பால் வீழ்த்தும் ஒருவன்;

சிங்க முகந்தினில் சீறும் ஒருவன்;


சேர்ந்தே அருளும் ஞானத் தலைவன்!

குரு ராகவேந்திர என்னும் ஒருவன்!


கண்ணின் கீதையை கவிதையாய் தந்தான்;

மூல ராமனை நெஞ்சில் வைத்தான்;

சிங்கமுகனின் பக்தனின் இருப்பிடம்' சேர்ந்தே அமர்ந்தான்;


மந்தி ராலய மண்ணில் வாழ்ந்தான்

துங்கபத்திரை ஆற்றின் கரையில்;

துன்பம் தீர்க்கவே தன்னைத் தந்தான்!


அருள்வாய் குருவே! அன்பின் வடிவே!

யாரிங்கு உள்ளார்?

எமக்கே இங்கே?


குருவே சரணம்! குருவே சரணம்!

கூடும் உறவுடன் உன்னிடம் சரணம் !

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்