ஆரம்பம் கணபதி
ஆரம்பம் ஆரம்பம் உன்னாலே ;
ஆனந்தம் ஆனந்தம் தன்னாலே !
தடைகள் நீங்கி மடை போல் வெள்ளம் பாய்ந்திடும் நிலமதில் உன்னாலே;
பாய்ந்திடும் நீரதில் வாழ்ந்திடும் பயிர்கள் வாழ்வினை தந்திடும் தன்னாலே !
அன்னையின் கரங்கள் ஆயிரம் பொன்கள் அள்ளியே தந்திடும் உன்னாலே ;
ஆயிரம் தாமரை மலர்களின் மேலே அன்னையின் வாசம் முன்னாலே !
ஏந்திடும் கைகள் இனிப்புகள் தந்து வாழ்ந்திடும் எம்மை தன்னாலே ;
என்றுமே என்றுமே எங்கள் வாழ்வதில் வாழ்ந்திடும் தெய்வம் நீ தானே !
நீதானே என்றும் நீதானே எங்கள் லட்சுமி கணபதி நீதானே
Comments
Post a Comment