குரு ராகவேந்திர

கண்டிருப்போம் உன்னை கண்டிருப்போம் 

காமதேனு வாய் கண்டிருப்போம் 


கொண்டிருப்போம் தினம் கொண்டிருப்போம் 

குருவே உன்னருள் கொண்டிருப்போம்


மண்ணில் பிறந்த மனிதருக்கு 

விண்ணில் இடமுண்டு வெல்வதற்கு

உன்னில் கரைந்த எங்களுக்கு 

விண்ணில் வெல்ல இடமெதற்கு


சொல்லும் நாமம் உன் நாமம் 

சொல்லின் பொருளாய் திருநாமம்


மண்ணில் வாழும் காலத்திலே 

மனதில் நிம்மதி தரும் நாமம் 


மழை முகில் மகிழும் மார்கழியில் 

மண்ணில் மலரும் வெண் பனியில்


நிறைவாய் வாழ்ந்திட அருள் வேண்டும் 

குருவே உந்தன் துணை வேண்டும்


ராகவேந்திரா அருள் வேண்டும் 

ராகவேந்திரா துணை வேண்டும்

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்