வாழ்த்துக்கள் சகோதரனே
வாழ்த்துக்கள் சகோதரனே!
வற்றாத காவிரியின் ஈர மண்ணே!
வாழைத் தோட்டத்து வளமான பாச நிழலே!
வாழ்வில் பள்ளங்களை
வசதியான மேடாக மாற்றம் செய்த
பெரும் உழைப்பே!
உட்கார நேர மில்லா உற்சாக சிறு நடையே!
உயரத்தில் மட்டுமின்றி
உள்ளத்தால் உயர்ந்தவனே!
உயிர் தந்த தாயவளும்;
உடன் வந்த துணையாளும்;
உளம் மகிழ குழந்தைகளும்;
உற்சாக பேத்திகளும்
பேரன்களும் ;
உடன் பிறந்த தங்கைகளும்; உறவுகளும் ;
கொண்டாடி மகிழ்ந்திடவே; வாழ்ந்திருப்பாய்! நலமாக!
பல்லாண்டு! பல்லாண்டே!
Comments
Post a Comment