வையம் காத்திடும் வைத்தீஸ்வரன்
உப்பும் மிளகும் உன் அருள் நீரில் ஒன்றாய் கரைத்து; எம் நலம் வேண்டி பாடி நின்றோம்
கண் மலர் திறந்து காத்திடும் தையல் நாயகி; முன் கரம் ஏந்தி நின்றோம்
வையம் வாழ்ந்திட வாழ்வது செழித்திட;
வைத்திய நாதன் அருள் வேண்டி நின்றோம்
வான் தரும் மழைபோல்; மண் தரும் பயிர் போல்; மங்கையின் துணையுடன் காப்பவனே!
வளம் கொண்ட நிலமது' வளர்த்திடும் பயிராய்; வாழ்வதை காத்திடும் வைத்தியனே!
வாழ்ந்திடும் நாளில் '
வாடா முகத்துடன் வந்துனை பாடுவோம் வைத்தியனே!
வைத்தியனே எங்கள் வைத்தீஸ்வரனே!
Comments
Post a Comment