வாழ்க எம் செல்லமே
ஓடிவரும் காவிரியே உற்சாகப் புன்னகையே!
கூடி வரும் மேக மெல்லாம் கொண்டாடும் தேன் மழையே !
ஆடி வரும்; பாடி வரும்; ஆனி மாசம் தேடி வரும் ;
அற்புதமே; அதிசயமே; எங்க வீட்டு சொப்பனமே!
கொஞ்சம் மொழி பேசி நிக்கும்; குறுகுறுன்னு பாத்து நிக்கும் ;
கூட பிறந்த அண்ணன் கொண்டாட பார்த்திருக்கும் !
தாய் தகப்பன் மனசுபோல தங்கமா வாழ்ந்திருக்கும்;
தன்னோட உறவெல்லாம் தாங்கி நிக்க நாள் இனிக்கும்!
வானாட்டம் மண்ணாட்டம் வத்தாத ஆறாட்டம்;
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் வாசலிலே தேரோட்டம்!
சாதிக்க வலுவிருக்கும் சாயாத மனசிருக்கும்;
ஓடிவா எம் உசுரே; உலகமெல்லாம் காத்திருக்கும்!
ஓடிவா எம் உசுரே; உலகமெல்லாம் காத்திருக்கும் !
Comments
Post a Comment