ராம் அனுமன்
ராமா ராமா ராமா என்றே நாளும் பாடிடுவான்
நம்பிக்கை தந்திடும் ராம நாமத்தை நாளும் பாடிடுவான்
அனுமன் நாளும் பாடிடுவான்
இதயத்தின் உள்ளே வாசம் செய்திடும் இறைவனை பாடிடுவான்
இன்னல் தீர்த்திடும் ராம நாமத்தை பாடியே வாழ்ந்திடுவான்
பாடியே வாழ்ந்திடுவான் அனுமன்
ஆடியே வாழ்ந்திடுவான்
பண்பின் சிகரமாய் வாழ்ந்தவன் ராமன் நாமத்தை பாடிடுவான்
தாயவள் சீதை தந்த மோதிரம் தாங்கியே வந்திடுவான்
தாளத் துயருடன் அன்னையின் நிலையை அனுமன் கூறிடுவான்
ஆற்றலின் வடிவமாய் அன்னையை மீட்க அரும்பணி ஆற்றிடுவான்
அண்ணல் ராமன் இதயத்தின் ஈரத்தில் என்றும் வாழ்ந்திருப்பான்
அனுமன் என்றும் வாழ்ந்திருப்பான்
ராம ராம ராம ராம ராம ராம ராமா
ராம சீதா ராம சீதா ராம சீதா ராமா
Comments
Post a Comment