ஊழியில் ஆழி சிவனே

ஊழியில் ஆழி எழுந்திடவே 

பெரும் ஊனும் உயிரும் மறைந்திடவே


பொங்கி எழுந்த பிரளயத்திலே 

போயின போயின போயினவே

எல்லாம் போயின போயின போயினவே


போயின வெல்லாம் மீண்டிடவே 

ஊனும் உயிரும் வாழ்ந்திடவே 


புறப்பட்டு வந்தாள் தாய் அவளே

பூமியை காத்திட கண் விழித்தே


பொழுது சாயும் நேரத்திலே 

பொங்கிடும் கருணை  பெண்ணவளே 


வேண்டி நின்றாள் சிவன் முன்னே 

வேலவன் தந்தை அவன் முன்னே 


நான்கு சாமமும் கண்விழித்தே 

நாயகன் சிவன் அவன் தன் முன்னே


வேண்டி நின்றாள்  தாயவளே 

விண்ணவன் மன்னவன் அருளிடவே


புலியின் ஆடையில் பாம்புடனே 

உடுக்கை ஒலித்திட சங்குடனே


மண்டையோட்டின் மாலையுடன் 

மன்னவன் சிவன் அவன் பிறையுடனே 


காட்சி தந்தான் கண்முன்னே 

மீட்சி தந்தான் மண்ணிதற்கே


சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே

சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே


மீட்சி தந்தான் சிவன் அவனே

சிவ சிவ சிவ சிவ சிவன் அவனே


ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்