அம்மா என்று சொல் போதும்
அம்மா என்ற சொல்லொன்று போதும்
ஆயுள் முழுவதும் வேறென்ன வேண்டும்
தந்தாய் உயிரைத் தாங்கியே நின்றாய்
தாயே எமக்கு வேறென்ன வேண்டும்
தாயாய் உன்னை பெற்றதில் பெருமை
தந்தை தாயுடன் வாழ்ந்தது அருமை
தடைகள் தாண்டி வளர்த்தாய் எம்மை
தன்னலம் மறந்தே வாழ்ந்தாய் உண்மை
கள்ளம் இல்லா உள்ளம் தந்தாய்
கண்களில் பாசம் காட்டியே நின்றாய்
எதற்கு கவலை என்றே சொல்லி
என்னதான் நடக்கும் நடக்கட்டும் என்றாய்
எங்கள் வாழ்வின் ஒளியே நீயே
எம்முடன் என்றும் வாழ்வாய் தாயே
Comments
Post a Comment