தியாகராஜரின் ராமன்

கண்டேன் உன்னையே கண் முன்னே ராமா 

கண்டேன் உன்னையே கண்முன்னே ராமா


கருநீல வண்ணா ரவி குல மன்னா 

கண்டேன் உன்னையே கண்முன்னே ராமா


கருணையின் வடிவே காட்சி தந்தாயே 

கண்முன்னே குடும்பமாய்  

கருமேக மழையாய் 

காவலன் நீயே காட்சி தந்தாயே 


கண்களில் ஈரம் காவிரியானது 

கண்டு துடைத்திட கங்கையே வந்தது

என்ன நான் சொல்வது? எப்படி சொல்வது ?

நான் பெற்ற பயனிது !யார் கொண்டு தந்தது?


என் இசை இசைப் பாடலில் 

என்ன நீ கண்டது ?

ஏழையின் கண்முன்னே நீ வந்து நின்றது!


ராமா! ராமா! என்ற நாமமே தந்தது

ராமா உன் கருணையில் ராகங்கள் கரைந்தது


ஏழையின் குடிசையில் இறங்கிய பாதமே! 

என் உயிர் கீதங்கள் போற்றிடும் ராகமே!


ராமா! ராமா! என்றும் உன் நாமமே 

இனித்திட வேண்டும் 

அது மட்டும் போதுமே


தியாகய்யன் எனக்கு அது மட்டும் போதுமே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்