அன்னையும் பிதாவும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற
ஔவையின் சொல்லில் வாழ்பவர் யார்
அன்னை பார்வதி ஈசனை தவிர
சொல்லில் வாழ்வது வேறிங்கு யார்
அன்புடன் தாயின் மடியில் அமர்ந்து
வாழும் உலகை ஆள்பவன் யார்
யானை முகத்தால் அகிலத்தை காத்திடும் அற்புத நாயகன் விநாயகன் பார்
ஏந்திய வேலுடன் மயில் மீதேறி
உலகம் சுற்றிய மைந்தன் யார்
உண்மையில் உலகம் எதுவென காட்ட பழநியில் நின்ற முருகன் பார்
தாய்க்கு தலையை தந்த விநாயகன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன அழகன்
தந்தது என்ன எண்ணியே பார்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஔவையின் சொல்லில் வாழ்ந்திடப் பார்
Comments
Post a Comment