குரு ராகவேந்திர

அன்பாய் அருளுடன் பார்க்கும் கண்கள் என்றும் உனதன்றோ,

ஆயிரம் கவலைகள் அற்புத நொடியில் தீர்ப்பவன் நீயன்றோ,

என்றும் நீயன்றோ  எம் குருவும் நீயன்றோ, ராகவேந்திர  ராகவேந்திர குருவும் நீயன்றோ,

காவிரி தந்த நாயகன் கொண்டது மந்திராலயமன்றோ,

துங்கபத்திர கரைதனில் நின்றது காவிரி மைந்தனன்றோ,

உறவுகள் தந்தது பாலமமைத்தது

துறவியின் கருணையன்றோ,

உறங்கா விழிகொண்டு உண்மையை சொன்னது உயர்ந்தவன் உள்ளமன்றோ,


எல்லாம் துறந்து எல்லாம் தந்தது 

எங்களின் தெய்வமன்றோ,

என்றும் நிலைத்து எம்மைக் காப்பவன்  

ஏழையின் மைந்தனன்றோ,


கரங்கள் கூப்பி கண்ணில் நீர் கொண்டு

நிற்கும் மனிதனன்றோ,

ரட்சிப்பான் எமை ரட்சிப்பான்  

ராகவேந்திர குருவுமன்றோ

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்