சங்கர நாராயணன்

பார்க்கும் பார்வையில் ஓர் உருவாய்

காக்கும் விதத்தில் ஈர் உருவாய்


கடலில் நதிபோல் கலந்திருக்கும்

கற்பக தருவாய் விரிந்திருக்கும் 


வாழ்வின் வழியாய் எம் ஈசன் 

வாழ்வை காக்கும் பரந்தாமன் 


எம்மிரு கண்களில் ஒளியாக 

எங்கள் சங்கர நாராயணன்


சங்கும் உடுக்கையும் ஓர் ஒலியாய் 

இடபமும் கருடனும் ஓர் உயிராய் 


வாழ்வும் வளமும் ஓர் கனவாய் 

வலமாய் இடமாய் ஓர் உடலாய் 


வந்தான் சங்கரநாராயணன்

தந்தான் சங்கர நாராயணன் 


சங்கரனே எங்கள் நாராயணன்

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்