ஆடும் கால்களில் அதியமே

ஆடும் கால்களில் அதிசயமே

ஆனந்தம் பொங்கும் சிவமயமே


கூடும் கைகளின் அபிநயமே

தேடும் விழிகளில் சித்திரமே


தில்லையில் ஆடும் நடராசன்

சிதம்பர ரகசியம் தரும் நேசன்


கொல்லையில் பூக்கும் மலர் வாசன்

கொண்டவள் சக்தியின் உயிர் நேசன்


அருவாய் உருவாய் வாழ்வு நிலை

அடிமுடி காட்ட அண்ணா மலை


தருவான் பரமன் வாழ்வின் மழை

தன்னிக ரில்லா பரதகலை


எழுவான் ஈசன் பகலவனாய்

என்றும் இருளில் ஒளியவனாய்


மறைவான் ஈசன் இருளவனாய்

மனிதர் வாழ்வின் சுமையவனாய்

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்